இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருந்தது தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, சென்னை உள்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. அடுத்தடுத்து பெய்த மழை காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள ஏரி குளங்கள் நிரம்பிய நிலையில், பல இடங்களில் சாலைகள், மின்கம்பங்கள், கல்வி நிலையங்கள் என பல கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.இந்த பாதிப்புகளை சீரமைக்க ரூ.6,299 கோடி தேவை என பிதமர் மோடிக்கு , முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.