ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் பணியாளர்கள் சார்பில் கொடி நாள் நிதி

Roots-Photo.jpeg

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரனிடம்  கோவை ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் தலைவர் கே.ராமசாமி, மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தலைவர் டாக்டர் கவிதாசன் ஆகியோர் ரூட்ஸ் குரூப்  பணியாளர்களின் சார்பாக கொடி நாள் நிதியாக ரூ ரூ 1,12,700/- வழங்கினர். இந்நிகழ்ச்சியில்  நிறுவனப் பணியாளர்கள் சார்பாக எம்.சரவணன், கே.எஸ்.ஸ்ரீதர்ராவ்,​​  கே.மணிகண்டன், ஆர்.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினர், மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக நாட்டுப்பற்று மிக்க குடிமகனாக பணியாளர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை அளிக்கும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டது. நிறுவனத் தலைவர் கே.ராமசாமியின் அறிவுரைப்படி பணியாளர்கள் அனைவரும் தாமாக முன்வந்து, மனமுவந்து இந்த நிதியை வழங்கியுள்ளனர்.இனி வருகின்ற ஒவ்வொரு வருடமும் கொடி நாள் நிதிக்கு அனைத்துப் பணியாளர்களும் தங்களது பங்களிப்பை செலுத்துவோம் என பணியாளர்கள் சார்பில் பிரதிநிதிகள்  தெரிவித்தனர்.

scroll to top