2022 – 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய நிதிநிலை அறிக்கையில் முக்கிய அம்சங்கள். எண்ம (டிஜிட்டல்) கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த விருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2023ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ் புதிய எண்ம கரன்சி அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பிட்காயின் போன்ற எண்ம (டிஜிட்டல்) கரன்சி வருவாய்க்கு 30 சதவீத விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ராணுவ தளவாடங்களில் 68 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியாக உருவாக்க திட்டம். எண்ம (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனை மையங்கள் உருவாக்கப்படும். எண்ப பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு மாவட்டங்களில் புதிய மையங்கள் திறக்கப்படும். நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும்வகையில், நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் எண்ம பரிவர்த்தனை மையங்கள் உருவாக்கப்படும்.