ரிங் ரோடு அம்மா திடலில் அரிவாளுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது

636427129074337816-Prison-Bars-Cuffs-2-scaled.jpg

மதுரை மார்ச் 28 அண்ணா நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ். இவர் பாண்டி கோயில் ரிங் ரோடு அம்மாதிடல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் .அப்போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் பதுங்கினார். அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பைச் சேர்ந்த பாக்கியராஜ் 37 என்று தெரியவந்தது. அவரிடம் சோதனை செய்தார். சோதனையில் அவர் அரிவாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அரிவாளை பறிமுதல் செய்து பாக்யராஜை கைது செய்தார்.

scroll to top