ராயல் கேர் மருத்துவமனை ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரியுடன் இணைந்து மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு ஒரு பகுதியாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் ராயல் கேர் புற்று நோய் மருத்துவர்கள் சுதாகர் மற்றும் கல்லாரி தாளாளர் திரு.சீலன் துவக்கி வைத்தனர். மருத்துவர்கள் சுதாகர் மற்றும் சுஜித் பேசுகையில் மார்பக புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிதல், சிறந்த சிகிச்சை மேற்கொள்ளுதல் மூலம் முழுமையாக குணமடையலாம் என்று கூறினார். இதில் மருத்துவமனை மார்க்கெட்டிங் துறை சீனியர் மேலாளர் M .வெங்கடேசன், உதவி மேலாளர் கே. கணேஷ் மற்றும் T . சௌந்தர்ராஜன் கலந்து கொண்டனர்.