ராயல் கேர் மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு வாக்கத்தான்

vlcsnap-2023-03-26-21h37m23s055.png

கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக தலைக்காயம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கத்தானை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர்,மருத்துவர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற வாக்கத்தானை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர்,தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்றபடி பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துக்களை தவிர்க்க இயலும் என கூறினார்.தொடர்ந்து பேசிய மருத்துவர் மாதேஸ்வரன் சாலை பாதுகாப்பில் பொதுமக்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பாக பொதுமக்கள் மன அழுத்தங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற வாக்கத்தான் துவக்க நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு துறை தலைவர் மருத்துவர் சிவக்குமார், மருத்துவ இயக்குனர் பரந்தாமன் சேதுபதி,தலைமை செயல் அதிகாரி வாசுதேவன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் துவங்கிய வாக்கத்தான் பிரதான சாலை வழியாக நஞ்சப்பா சாலை ரயல்கேர் மருத்துவமனையை வந்தடைந்தது.இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

scroll to top