ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரனுக்கு இயற்கை காவலர் விருது

​கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இதற்கென தனியாக உயிரின் சுவாசம் எனும் அறக்கட்டளையை துவக்கி இதன் வாயிலாக பத்து கோடி மரங்களை 100 மாதங்களில்  நடுவது என்பதை  இலட்சியமாக கொண்டு பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவரது சமூக அக்கறையை பாராட்டி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட கிளை சார்பாக டாக்டர் மாதேஸ்வரனுக்கு இயற்கை காவலர் எனும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு வடகோவை மாநகராட்சி ராமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கங்காதரன் விருது வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், ராயல் கேர் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் வாசுதேவன், சீனியர் மார்க்கெட்டிங் அதிகாரி வெங்கடேஷ், உயிரின் சுவாசம் அறக்கட்டளை மேலாளர் மந்திராச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்..முன்னதாக விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு டாக்டர் மாதேஸ்வரன் மரக்கன்றுகளை வழங்கினார்..இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பலராமன்,மற்றும் நிர்வாகிகள் ராமசுந்தரம்,முகம்மது, சிங்காரவேலு உட்பட பலர் உடனிருந்தனர்.

scroll to top