ராமர் கோவில் கட்ட ரத யாத்திரை, 92 பேர்கள் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

images-22.jpeg

ராமர் கோவில் கட்ட ரதயாத்திரை கடந்தவருடம் வந்தது. மதுரையில் இதற்கு முறைப்படி அனுமதி பெறப்பட்டது. ஆனால் ரத யாத்திரையின் போது பாரதிய ஜனதா கட்சியினர், ஆர். எஸ். எஸ் அமைப்பினர்கள் தொன்னூற்று நான்கு பேர்கள் மீது அனுமதி இன்றி கூடியது, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தியது, பிரிவினையை தூண்டியது உட்பட பல பிரிவுகளில் மதுரை கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்ட பட்ட தொன்னூற்று நான்கு பேர்கள் சார்பில் வழக்கரிஞர்கள். கௌரிசங்கர், முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ரத யாத்திரைக்கு உரிய அனுமதி பெற்றும், போலீசார் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் தொன்னூற்று நான்கு பேர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்ய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பி தொன்னோற்று நான்கு பேர்கள் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்திவிட்டார்.

scroll to top