ராணுவ தளவாட கண்காட்சி

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன உற்பத்தி தொழிற்சாலையில், பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி, இன்று முதல் டிசம்பர் 19 வரை நடக்கிறது.ராணுவ தொழில்நுட்பம், பாதுகாப்பு தளவாடங்கள் குறித்து, மாணவர்கள் தெரிந்து கொள்ளவும், அவர்களை ஊக்கப்படுத்தவும், ஆவடி கனரக இன்ஜின் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் ராணுவ உடைகள் தயாரிப்பு தொழிற்சாலைகள் சார்பில், இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியில், ராணுவத்தில் பயன்படுத்துப்படும் பீரங்கி, டாங்கிகள் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கருவிகள் உட்பட பல்வேறு தளவாடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.மேலும், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெறுகின்றன. ராணுவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், இதில் பங்கேற்கலாம்.இந்த கண்காட்சி, புரூப் ரேஞ்ச் காம்ப்ளக்ஸ், சி.ஆர்.பி.எப்., சாலை, நியூ வெள்ளனுார், ஆவடி, சென்னை – 600 065 என்ற முகவரியில் நடக்கிறது. மேலும் விபரங்களை, 94440 50375, 94238 23542 ஆகிய எண்களில் தெரிந்து கொள்ளலாம்.

scroll to top