முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜி விருதுநகர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி வரும்20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜியை கைது செய்த விதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு அவருக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.