ராஜிவ் கொலையாளிகள் 6 பேர் விடுதலை;திமுக வரவேற்பு; காங்கிரஸ் எதிர்ப்பு

Pi7_Image_Rajiv-Gandhi-assasination.jpg.image_.845.4401.jpg

THE KOVAI HERALD

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழக அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை, 30 ஆண்டுக ளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவர்களை விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
திமுக- வை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கு போதும், ஆட்சி யில் இருக்கும் போதும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, முதன்முதலில் 2000-ஆம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். அதன்பிறகு தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்த போதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம்.
மாநில அமைச்சரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில்தான் பேரறி வாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. 7 பேர் விடுதலையில் இது முதல் கட்ட வெற்றியாக அமைந்தது. அடுத்தபடியாக நளினி, ரவிச்சந்திரன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந் தன் ஆகியோரின் விடுதலையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக் கைகளை எடுத்து, இன்றைக்கு அவர்களுக்கும் பேரறிவாளனின் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
30ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவ ர்களுக்கு மனிதநேயத்தின் அடிப் படையில் கிடை த்துள்ள இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் திமுக வின் தேர்தல் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இந்த தீர்ப்பு வருத்தமளிப்ப தாக கருத்து தெரிவித்துள் ளது.
இதுதொடர் பாக அகில இந்திய காங்கி ரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி, வெளியிட் டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் முற்றிலும் தவறானது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி தெளிவாகக் குறைகூறுகிறது, இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது என்று தெரிவித்து உள் ளார். மேலும் தமிழக காங்கிரஸ் எம்பி மாணிக்கதாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறுகை யில், 6 பேர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை காங்கிரசின் மூத்த தலைவர் கள் அரைமனதுடன் கண்டித்தாலும்,அவர்கள் சிறையில் இருந்து விடுவிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். அரசியலமைப்பு சாசனம் தனக்கு வழங்கியுள்ள பொறுப்புகளையும், நமது தேசத்தின் இளைஞர்க ளுக்கு ஒரு தவறான முன்னு தாரணமாகிவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு முதல்வர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவருக்கு தமிழகத்தை புகலிடம் ஆக்கிவிட வேண்டாம் என்றும்முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம் முன் னாள் முதல்வர் ெஜய லலிதா நோக்கம் நிறைவேறியிருக்கிறது என்றார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டர் பதிவில், பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இந்த 6 பேருக்கு உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. கிடைத்த தீர்ப்பு தாமதமானாலும் அவர்களின் விடுதலை வரவேற்கத்தக்கது.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,
7 பேர் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவின் தொடர் நட வடிக்கையால் தான் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள னர். திமுக நினைத்திருந் தால் 7 பேரையும் முன்பே விடு வித்திருக்கலாம். ஆனால் செய்யவி ல்லை. 7 பேர் விடு தலைக்காக திமுக ஒரு துரும்பைm க்கூட கிள்ளிப் போட் டது கிடையாது என்றார்.
மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ கருத்து தெரிவிக்கை யில், 30 ஆண்டுகள் எந்த தவறும் செய்யாமல் இருண்ட சிறையிலே வாடி, வதங்கிய தூக்கு கயிற்றின் நிழலிலே சித்திரைவதைப்பட்ட 6 பேர் இன்றாவது விடு தலை ஆனார்களே என்றபோது நிம்மதி பெரூ முச்சு விட முடிகிறது. அவர்க ளுக்கு விமோர்சனம் கிடைத்து ள்ளது என்றார்.
உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடு மாறன்,‘‘ உச்சநீதிமன்றத் தின் இந்த தீர்ப் பிற்காக முந்தைய அதிமுக ஆட்சிக்கும், தற்போதைய திமுக ஆட்சிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் விடுதலையான 6 பேரையும் அவர்களது உறவினர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அங்கு அனுப்ப வேண்டும் என்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: “ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக் கிறது.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: “தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நிலைப்பாட்டிற்கு விரோதமாக பேரறிவாளன் விடுதலை இந்த ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை வரவேற்கிறோம். தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது – சட்டப் பிழை என்பதற்கான சான்றே இந்தத் தீர்ப்பு என்றார்.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “ராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்புக்காக சட் டப் போராட்டம் நட த்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பேரன்பும்!” என்றார்.

KAMALA KANNAN S Ph. 92443 17182

scroll to top