ராஜபாளையம் ஸ்ரீசொக்கர் கோவிலில் மாசி மகம் பிரம்மோற்சவ கொடியேற்றம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் வீற்றிருக்கும் ஸ்ரீசொக்கர் கோவிலில் மாசிமகம் பிரம்மோற்சவத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ராம்கோ குழுமத் தலைவரும், பரம்பரை அறங்காவலருமான பி.ஆர்.
வெங்கட்ராமராஜா தலைமையில், கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடிமரத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகங்கள் செய்யப்பட்டன. ஸ்ரீசொக்கர், ஸ்ரீமீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியர்கள் செய்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி – அம்பாள் திருக்கல்யாணம் வரும் 13ம் தேதி (ஞாயிறு கிழமை), தெப்போற்சவம் திருவிழா வரும் 14ம் தேதி (திங்கள் கிழமை), தேர்த் திருவிழா 15 ஆம் தேதி செவ்வாய் கிழமையும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் தினசரி இரவு சுவாமி, அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை ராம்கோ நிறுவன நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

scroll to top