ராஜபாளையம் மாரியம்மன் திருக்கோவில் புரட்டாசி மாத தேரோட்ட திருவிழா

WhatsApp-Image-2021-10-08-at-2.46.52-PM.jpeg

ராஜபாளையம் அருகே மாரியம்மன் திருக்கோவில் புரட்டாசி மாத தேரோட்ட திருவிழா சட்டமன்ற உறுப்பினர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் புரட்டாசி மாதம் புரட்டாசி பொங்கல் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா காலமாக இருந்ததால் தேரோட்டம் நடைபெறவில்லை . இந்த ஆண்டு அரசு விதித்துள்ள கட்டு
பாடுகளுக்கு உட்பட்டு .கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது

இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது ஒன்பதாம் நாளான இன்று தேரோட்ட திருவிழா நடைபெற்றது இந்த தேரோட்ட திருவிழாவில் தொழிலதிபர் காமராஜ் தேர் திருப்பணி செய்து நன்கொடையாக வழங்கியுள்ளார் இந்த தேர் திருவிழாவில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர் . தேருக்கு பின்னால் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தேருக்குப் பின்னால் விழுந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்..

scroll to top