ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், ஆதரவற்ற 201 குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கினார்

WhatsApp-Image-2021-10-24-at-11.26.08-AM-1.jpeg

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன், தனது சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்தை ஒவ்வொரு மாதமும், பல்வேறு நலத்திட்ட உதவிகளாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். தனது 3 மாத ஊதியத்தொகை 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகளாக வழங்கினார்.

ராஜபாளையம் அருகேயுள்ள பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள லைட் ஆப் லைப் (Light of life) குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என 3 காப்பகத்தில் உள்ள 201 ஆதரவற்ற குழந்தைகளுக்கு, தொடர்ந்து 5வது ஆண்டாக, தீபாவளி பண்டிகைக்கான புத்தாடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

scroll to top