ரஷ்யா – உக்ரைன் போர் : ஐநா பொதுச்சபை அவசரக் கூட்டம்

ரஷ்யப்படைகள் உக்ரைன் மீது நடத்தி வரும் போர் தொடர்கிறது.  இதனால் உலக நாடுகள் மிகவும் கவலை அடைந்துள்ளன.  ரஷ்ய விமானப் படைகள் குண்டு வீசி உக்ரைன் நாட்டில் உள்ள விமான நிலையங்களை அழித்துள்ளனர்.  இதனால் அந்நாட்டில் விமான போக்கு வரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. பல வெளிநாட்டவர் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாததால் அண்டை நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர்.  அவ்வகையில் இதுவரை 1000க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று போர் குறித்து விவாதிக்க ஐநா பொதுச்சபை அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது.   இந்த கூட்டம் நடத்தை பொதுக் குழ்வுவில் உள்ள 15 நாடுகளில் 3 நாடுகள் தவிர மற்ற நாடுகள் ஆதரவு அளித்துள்ளதை அடுத்து கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன.

scroll to top