ரயில் தீ வைப்பு சம்பவம்: மாணவர்களுக்கு ரயில்வே அமைச்சர் வேண்டுகோள்

கயாவில் நடைபெற்ற போராட்டத்தில் பயணிகள் ரயிலின் பெட்டிகளுக்கு தேர்வர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சர் வெளியிட்ட செய்தியில், மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். அனைத்து ரயில்வே பணியாளர் தேர்வு வாரிய தலைவர்களும் மாணவர்களின் குறைகளைக் கேட்டு, அவற்றைத் தொகுத்து, குழுவிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக் குழு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விசாரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

scroll to top