விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில், இராஜபாளையம் – வெம்பக்கோட்டை வரை செல்லும் சாலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . தற்போது ,ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால், வாகனங்கள் சுற்றி செல்கிறது. மேலும், இருசக்கர வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கணபதியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதையை பயன்படுத்தி செல்கின்றனர் .
மழை நேரங்களில் இந்த பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால், வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அதிக அளவில் சகதிகள் இருப்பதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது .
சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் நேரில் பார்வையிட்டு அந்த பகுதியில் தேங்கியுள்ள தண்ணீருக்கு மேல் சிமெண்ட் கலந்த சல்லிகளை போட்டு தற்காலிகமாக சாலைகளை சரி செய்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு . சிமெண்டு ஜல்லி கீழே போட்டு சாலையை சீரமைத்து வரும் பணியில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ .ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் இந்த பகுதியில் தண்ணீர் செல்லாமல் இருப்பதற்கு தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு தண்ணீரில் செல்ல மாற்றுப்பாதை செல்வதற்கு வழி செய்ய வேண்டும் என, சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி பொதுமக்கள், கோரிக்கை வைத்தனர் . விரைவில் சரி செய்வதாக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தெரிவித்தார்..