ரஜினி ஸ்டைலுக்கு மாறிய தோனி

ஐபிஎல் தொடரை பிரபலப்படுத்தும் வகையில் தோனி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் நடித்துள்ள புரோமோவின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த புரோமோவில் வரும் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரஜியாக மாறி உள்ளார். காக்கி சட்டை, போலி மீசை, கூலிங் கிளாஸ் என பஸ் ஓட்டுநர் போல் நடித்துள்ளார். ரஜினிக்கு உண்டான கூலிங் கிளாஸை கழற்றி போடும் காட்சிகளில் மகேந்திர சிங் தோனி மாஸ் காட்டி உள்ளார். இந்த பிராமோ காட்சிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்காக படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி உள்ளது.

scroll to top