ரஜினிக்கு மகளாகும் பிரியங்கா மோகன்..

thalaivar-169-8111-e1647441187332.jpg

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 169-வது படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். குடும்ப காமெடி கலந்த அதிரடி படமாக இப்படம் உருவாக உள்ளது.தற்போது இப்படத்தின் நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. மிக விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளனர் படக்குழு. இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுகிறார் அதோடு படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இது இன்னும் உறுதிப்படுத்தாக தகவலாகவே உள்ளது.இந்த நிலையில் இப்படத்தில் ரஜினிகாந்த் மகளாக நடிக்க நடிகை பிரியங்கா மோகனிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதா நாயகியாக அறிமுகமானவர்.கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவர் படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரஜினிகாந்த் மகளாக பிரியங்கா மோகன் நடிப்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

scroll to top