டாக்டர் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பின் வரும் சிவகார்த்திகேயன் படம். ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் இப்படம் அமைந்துள்ளது.
மருத்துவரான சிவகார்த்திகேயன் தனது காதலி பத்மினியுடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. சில காரணங்களால் நிச்சயதார்த்தம் நின்று போகிறது. இந்நிலையில் பத்மினியின் தங்கை கடத்தப்படுகிறார். இதை அறிந்த சிவகார்த்திகேயன் கடத்தல் கும்பலை தேடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் டாக்டர் படத்தின் கதை.
காமெடி ஹீரோவாக தொடங்கி ஆக்சன் ஹீரோவாக தன்னை மாற்றி கொண்டு வரும் சிவகார்த்திகேயனை வேறு ஒரு கோணத்தில் காட்டக் கூடிய படமாக உள்ளது டாக்டர். எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக சமத்து பையனாக காணப்படுகிறார் சிவா. இரண்டாம் பாதியில் வரும் வில்லன் வினய் அதிரடி வில்லனாக இல்லாமல் அமைதியான வில்லனாக காணப்படுகிறார்.பிரியங்கா மோகனுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும். அருண் அலெக்சாண்டர், தீபா, இளவரசு போன்றோர் காமெடியில் அசத்தி உள்ளனர். அனிருத்தின் பின்னணி இசை ஒவ்வொரு சீனையும் அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கிறது.தனது முந்தைய படத்தை போலவே டார்க் காமெடி ஜானரில் கலக்கி இருக்கிறார் நெல்சன். சீமராஜா வில் தனக்கு மட்டுமே கதையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற தவறை சிவா, டாக்டர் படத்தில் அதனை திருத்திக் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்துள்ளார்.