19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மே.இந்திய தீவுகளின் ஆண்டிகுவா நார்த் சௌண்டில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் சனிக்கிழமை மாலை தொடங்கியது. இதில் 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து. இந்திய பௌலா் ராஜ் பவா 5/31 விக்கெட்டுகளையும், ரவிக்குமாா் 4/34 விக்கெட்டுகளையும், கௌஷல் 1/29 விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இறுதி மூன்று ஓவர்களில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன. 48வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். அதே ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய தினேஷ் பானா இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.இதன் மூலம் இந்திய அணி 5-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.