‘யுனெஸ்கோ அரங்கில் திருக்குறள் மாநாடு’: தமிழக அரசு

vlcsnap-2022-04-19-16h21m51s4.jpg

தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ் பண்பாடு துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். 1. திருக்குறளுக்கு ஐக்கிய நாட்டு கல்வி அறிவியல் பண்பாடு அமைப்பின்(யுனெஸ்கோ) அங்கீகாரம் கிடைக்கும் வகையில் பாரிசில் உள்ள யுனெஸ்கோ அரங்கில் திருக்குறள் மாநாடு நடத்த ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும். 2. தமிழகம் முழுவதும் 6,218 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்தி ஆண்டிற்கு மூன்று தமிழ்க் கூடல் நிகழ்வுகளை நடத்த ரூ. 5.60 கோடி வழங்கப்படும். மேலும் பல அறிவிப்புகளை வெளியிட்டார்

scroll to top