மே 8ல் பிளஸ் 2 தோ்வு முடிவு

Anbil-Mahesh-Poyyamozhi-2.jpg

பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கடந்த விளக்கமளித்த, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மே 7-ஆம் தேதி நீட் நுழைவுத்தோ்வு நடைபெறவுள்ளது. பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நீட் தோ்வெழுதும் மாணவா்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே, நீட் தோ்வுக்குப் பிறகு பிளஸ் 2 தோ்வு முடிவு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடவுள்ளாா்.

தோ்வு முடிவுகளை இணையதள முகவரிகளில் தோ்வா்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி ஆகியவற்றைப் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி மதிப்பெண் சான்றிதழ்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவா்களுக்கு அவா்கள் பயின்ற பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண் ணப்பிக்கும்போது வழங் கிய கைப்பேசி எண் ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகள் அனுப்பப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top