மே 1ம் தேதி மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

202106131045035369_Tamil_News_Tamil-News-TN-Govt-announced-18-restrictions-on-Tasmac-shops_SECVPF.jpg

மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுவதால் மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களின் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அனைந்தும் 1ம் தேதி மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மே தினம் கடைபிடிப்பதால்விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது, சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top