மேலூர் அருகே 25- ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற தேவர் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டகுடியில், 1996ஆம் ஆண்டு கிராம மக்கள் சார்பாக ஊரின் மையப்பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால், நிதி திரட்டப்பட்டு கோவிலாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது . இதற்காக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க. யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி விழா கொண்டடப்படும் நன்னாளில், மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தேவர் கோவிலில் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டுசென்றனர்.

இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பகதர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது

scroll to top