மேலக்கால் கிராமத்தில் மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

WhatsApp-Image-2023-04-05-at-7.03.13-PM.jpeg

அதுல இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பி .கே. முக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் சீர் மரபினர் நலச் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் தவமணி தலைமையில், சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து பாப்பாபட்டி கிராமத்திற்கு ஊர்வலமாக சென்றனர். இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு விரதம் இருந்து, மேலக்கால் கிராமத்தில் மெயின் வீதிகள் வழியாக முளைப்பாரி உடன் ஊர்வலமாக சென்றனர். பின்பு அங்கிருந்து வாகனத்தில் அனைவரும் பாப்பபட்டிக்கு சென்று அங்குள்ள குளத்தில் முளைப்பாரியை கரைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

scroll to top