மேயர் பங்களாவுக்குப் பராமரிப்புச் செலவு ரூபாய் ஒரு கோடியா?: திகைத்து நிற்கும் கோவை மாநகராட்சி

Pi7compressedmayorhouse.jpg

THE KOVAI HERALD  

ஒரு வீட்டைக் கட்டத்தான் கோடிக்கணக்கில் செலவு செய்வார்கள். சுண்ணாம்பு அடித்து ரிப்பேர் செய்ய ஒரு கோடி ரூபாய் செலவு செய்வார்களா? அப்படித்தான் கோவை மாநகராட்சி மேயர் பங்களா புனரமைத்து, அலங்காரம் செய்ய ரூ. 1 கோடி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக கவுன் சிலர்கள் தர்ணாவில் ஈடு பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி சாதாரண மாமன்றக் கூட்டம் கடந்த வியாழன்று கோவை விக்டோரியா ஹாலில் நடந்தது. ஏற்கனவே மன்றத்தில் நடந்த பிரச்சனையால் மூன்று கூட்டங்களுக்கு அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் ஆகியிருந்தனர். அதனால் கடந்த கூட்டங்களில் கோவை மாநகராட்சியே திமுக மற்றும் கூட்ட ணிக் கட்சியினர் மயமாகியிருந் தது. எதிர்கட்சியே இல்லாத நிலையிலும் இந்தக் கூட்டத்தில் தி.மு.க உறுப் பினர்களிடையேயே வாக்குவாதம் ஏற்பட் டது. மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள், உறுப்பினர் கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
இந்நிலையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் மூன்று பேரும், ஊழல் நடக்குதுங்கோ. கோடியில் மேயர் வீடு சுண்ணாம்பு அடிக்கறாங்கோ. மக்கள் வரிப்பணம் விரயம் ஆகுதுங்கோ.” என்ற பதாகைகளை ஏந்தி மாநகராட்சி மாமன்றம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அதில்தான் இந்த மேயர் பங்களாவுக்கு புனரமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது தெரிய வந்தது. இது குறித்து கோவை மாநகராட்சி அ.தி.மு.க குழுத் தலைவர் பிரபாகரனிடம் பேசினோம்,நாங்கள் மூன்று கூட்டங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நீடிக்கிறது. அதனால் கோவை மாமன்றத்தில் ஒரு விஷயத்தை எதிர்த்துக் கேட்க ஒருவர் கூட இல்லை. இதை பயன்படுத்தி சென்ற கூட்டத்தில் மேயர் பங்களா பராமரிக்க ரூ. 1 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். கோவை மேயராக 1996-ல் கோபாலகிருஷ்ணன் இருந்தார். அப்போது அவர் இந்த பங்களாவைப் பயன்படுத்தாமல் துணைமேயர் சங்கனூர் வேலுச்சாமிக்கு விட்டுக் கொடுத்தார். அதற்குப் பிறகு 2001-ல் மேயராக மலரவன் வந்தார். 2006-ல் காங்கிரஸ் மேயர் வெங்கடாசலம் வசித்தார். பிறகு மேயர்களாக வந்த செ.ம.வேலுச்சாமி, கணபதி ராஜ்குமார் எல்லாம் பயன்படுத்தியிருக்கிறார் கள். அப்போதெல்லாம் நாங் கள் இந்த பங்களாவிற்கு சென்று வந்துள்ளோம். கட்டிடம் நன்றாக உள்ளது. எல்லா அறைகளும் பளிங்கு போல் பளபளப்பாகத்தான் இருந்தது. கடந்த ஐந்து வருடத்தில் மேயர் இல்லாவிட்டாலும் கூட அது ஊழியர்களால் பராமரிக்கப்பட்டே வந்திரு க்கிறது. இப்படியிருக்க இப்போது இந்த பங்களாவைப் புதுப்பிக்க, அழகுபடுத்த என கடந்த கூட்டத்தில் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். அந்தக் கூட்டத்து தீர்மானம் வந்த பிறகு நாங்கள் இது முறையல்ல என்று விவரித்து மாநகராட்சி ஆணையரிடம் மனுக் கொடுத்தோம். கண்டுகொள்ளப்பட வில்லை. கோவை மாநக ராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் லாரிகள் எப்.சி செய்யப்படாமல் 5 மாதங்களாக அப்படியே இருக்கிறது. அதனால் குப்பை அள்ள போது மான லாரிகள் இல்லாமல் மாநகராட்சியே குப் பைக்கூளமாகிக் கொண்டி ருக்கிறது. தண்ணீர் சரியாக வருவதில்லை. சாலை முதல் சாக்கடை வரை எதையும் பராமரிப்பதில்லை. ஆனால் மேயரின் வீட்டை அலங்கரிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் கட்டிட பராமரிப்புக்கு ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர மத்திய மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு 6 கோடி ரூபாய் அளவிற்கு வீட்டு வரியை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்தார். வரியை ரத்து செய்த வீடுகள் யாருடையது என்பது இதுவரை தெரிய வில்லையெனவும், அதனா லேயே இவற் றின் வரிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படி யான ,நடவடிக்கைகள் மாநகராட்சிக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது!’’ என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் மேயர் வீட்டை அழகு படுத்த ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது பற்றி மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம். ‘‘முதல்வர், அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோருக்கு அரசு சார்பாக வீடு கள் ஒதுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட் டுள்ளது. அந்த வகையில் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் மேயர் கல்பனாவிற்கு வீடு ஒதுக் கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு அந்த வீடு பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளது. அரசுக்கு சொந்தமான அந்த வீடுதான் பராமரிக்கப் படவும், சீரமைக்கவும் உள் ளது!’ என்று தெரிவித்தனர்.
இவர்கள் இப்படிக்கூறினா லும் பொதுமக்களிடம் பேச்சு வேறுவிதமாக உள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய மிஸ்டர் பொதுஜனம் ஒருவர், ‘‘தமிழகத்திலேயே ரொம்பவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த பெண் மேயர் என்று போற்றப்பட்டார் கல்பனா. அவர் சாதாரண கூலித் தொழிலாளியாகவே வாழ்ந்தார். அப்படிப்பட்ட எளிய குடும்பத்தில் ஒரு பெண் மேயர் ஆவது தமிழகத்திற்கே பெருமை என்றெல்லாம் மீடியாக்கள் முழங்கியது. ஏழைகளின் பங்காளர், எளியவர்களின் தோழர் என்றெல்லாம் ஆளும் திமுக பெருமைபட் டுக் கொண்டது. ஆனால் இப்போது அவ ருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவுக்குப் பராம ரிப்பு செலவே ரூ.1 கோடி என்கிறார்கள். இங்கே பணக்காரர்கள் வந்தாலும், ஏழைகள் வந்தாலும் வரிப்பணம் எந்த வகையிலும் மிச்சமாகப் போவதில்லை!’’ என்றார்.

KAMALAKANNAN.S  Ph. 9244319559

scroll to top