உள்ளாட்சித் தேர்தல்கள் தேதி எப்போது அறிவிக் கப்படும் என்பதே தமிழ் நாட்டில் அத்தனை அர சியல்நோக்கர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது. ‘மழை விட்டதற்குப் பின்பு டிசம்பர் 10-11 தேதிகளில் தேர்தல் அறிவிப்பு வரலாம்!’ என் றும், ‘இல்லை மழை வெள்ளம்; கரோனா மற்றும் ஓமக்ரான் வைரஸ் தடுப்பு முன்னேற்பாடுகள் காரணமாக தேர்தல் மார்ச்சுக்கு பிறகு தள்ளிப் போகலாம்!’ என்றும் இருவேறு கருத்துகள் இது விஷயத்தில் கும்மியடிக் கின்றன.
இருந்தாலும் திமுக, அதிமுக தொடங்கி அத்தனை கட்சி அலுவலகங்களும் தேர்தல் கால கலை கட் டியுள்ளதையும், தம் கட்சியினரிடம் விருப்ப மனுக் கள் வாங்கும் வேகத்தையும் பார்த்தால் எந்த நேரமும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை அழுத்தந்தி ருத்தமாக பதிவு செய்து கொண்டிருக்கின்றன.
தமிழகம் முழுக்க நடை பெறவுள்ள இந்த தேர்தலில் அனைத்துக் கட்சிகளின் எதிர்பார்ப்பையும், ஆர் வத்தையும், கவனத்தையும் ஈர்த்தபகுதியாக விளங் குவது கோவை மாநகராட்சி தேர்தல்தான். ஏனென்றால் மற்ற மாவட்டங்களில் இல்லாத விதமாக இங்கே மட்டும்தான் 10-க்கு 10 சட்டப்பேரவைத் தொகுதிகளை ஆளுங் கட்சியான திமுக கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து நிற்கிறது.
9 தொகுதிகளில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களும், 1 தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ.,வுமாக மக்கள் செல்வாக்கு, பண பலம் என திமுகவிற்கு சவாலாக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ., என்று ஒருவர் கூட இல்லாத நிலையில் அரசு அதிகாரிகளையும், கட்சியையும் வழி நடத்த உள்ளூரில் ஒரு ஹீரோ இல்லாமல் திமுக தவித்துக் கொண்டிருக்கிறது. சக்ரபாணி, எ.வ.வேலு, இளித்துறை ராமச்சந்திரன் என பிற மாவட்ட அமைச் சர்களை இங்கே பொறுப்பில் போட்டும் கட்சிக்கும், ஆட்சிக்கும் பின்னடைவுதான்.
அதனால் அவர்களை திரும்ப பெற்ற நிலையில் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, அதிமுகவிலிருந்து விலகி வந்து கரூரில் மாபெரும் வெற்றிக்கனியை ஈட்டித்தந்த அமைச்சர் செந்தில்பாலாஜியை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக போட்டிருக்கிறது திமுக. அவரும் கடந்த ஒன்றரை மாத காலங்களில் மாவட் டம் முழுக்க பறந்து, பறந்து தீயாய் வேலை செய்திருக்கிறார்.
குறிப்பாக மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும், வார்டு வாரியாக அந்தந்த பகுதி திமுக பிரதிநிதிகள் மூலம் மக்கள் குறைகளை கேட்டு விண்ணப்பங்கள் பெற்று, மக்கள் சபை கூட்டங்களை நடத்தி இயன்ற வரை மக்கள் சொன்ன குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் ஒவ்வொரு வார்டுகளிலும் திமுகவின் முன்னாள் கவுன்சிலர்கள், கட்சிப் பிரதிநிதிகள் மக்களின் வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். இந்த வெளிச்சத்திற்குள் வந்தவர்களில் ஒருவருக் குத்தான் அங்கே கவுன் சிலர் சீட் என்பதும் இதன் மூலம் உள்ளங்கை நெல் லிக்கனியாக அர சியல் வட்டாரத்தில் அறியப் பட்டிருக்கிறது.
இதன் உச்சகட்டமாக கோவை மாநகராட்சித் தேர்தலுக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் வழங்கி வருகின்றனர். இதையொட்டி நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்று பேசுகை யில், “திமுக ஆட்சி எப்போது வரும் என ஏங்கியவர்கள் நம் தொண்டர்கள். இதற்காகக் கடினமாக உழைத்தவர்களும் நீங் கள்தான். ஆனால், 100 சதவீதம் பேரில் 20 சதவீதம் பேர் சரியாக அவர்களுடைய பணியைச் செய்யவில்லை. அந்த 20 சதவீதம் பேர் யார் என்பதை களை எடுத்து விட்டால் இயக்கம் வெற்றி பெறும். கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் திமுக வென்றது என்பதை திமுக தலைவரிடம் தெரிவிக்க வேண்டும் அதை இந்த முறை செய்து வென்று காட்டுவோம்!’ என்று சூளுரைத்துள்ளார்.
அதே சமயம் திமுக வின் பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸிலும் கடந்த வாரம் கட்சியினரிடம் காங்கிரஸ் கட்சி நிர்வாகி மயூரா ஜெயக்குமார் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இக்கட்சியின் சார்பாக மட்டும் கோவை மாநகராட்சியில் போட்டியிட 352 பேர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். அதே போல் அதிமுகவிலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு வாங்கி துவக்கி வைக்க, மாநகர் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுனன் மூலம் மனுக்கள் பெறப்பட் டுள்ளன. 65 வார்டுகளுக்கு பொறுப்பாக உள்ள இவரிடம் மட்டும் இதுவரை 450 மனுக்கள் வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் நிர்வாகி கள். அதிமுகவின் பிரதான கூட்டணிக்கட்சியான பாஜக விலும் விருப்ப மனு படலம் நடந்து கொண்டிருக்கிறது.
பாஜகவைப் பொறுத்தவரை மாநகராட்சியில் மொத்த முள்ள வார்டுகளில் 20 சத வீதத்தை தங்கள் கட்சிக்கு ஒதுக்கும்படி மேலிடம் மூலம் அதிமுக தலைமைக்கு வற்புறுத்தி வந்துள்ளார்கள் இதன் நிர்வாகிகள். அது எடுபடவில்லை. 10 சீட்டுகள் மட்டும் உறுதி என்று அதிமுக தரப்பு தெரிவித்து விட்டது. நமக்கு வெற்றி வாய்ப்பு உள்ள வார்டுகளுக்கு மட்டும் விண்ணப்பங்கள் கொடுங்கள். அதில் அவர்கள் கொடுக்கும் தொகுதியில் மட்டும் போட்டியிட்டால் போதும்; மற்றவற்றில் தனித்துப் போட்டியிட்டாலும், நமக்கு உறுதியாக வெற்றி தரும் வார்டுகளில் தனித்து சுயேச்சையாகக்கூட போட்டியிடுங்கள்!’ என கட்சியின் மாநிலத்தலைமை இவர்களுக்கு அறிவு றுத்தியுள்ளதாக சொல்லு கிறார்கள்.
திமுக கூட்டணிக்கட்சியான காங்கிரஸிலும் இதே நிலைதான். அவர்கள் எதிர்பார்ப்பு 20 வார் டுகள். ஆனால் கம்யூனி ஸ்ட்டுகளுக்கு தலா 3, விடுதலைச்சிறுத்தைக ளுக்கு 2, இரண்டு முஸ்லீம் லீக்குகளுக்கு தலா 2, மதிமுகவிற்கு 3, கொங்குநாடு ஈஸ் வரனுக்கும், இன்னமும் இதர கூட்டணிக்கட்சிகளுக்கும் தலா 1 தொகுதி ஒதுக்கினாலே கிட்டத்தட்ட 20 வார்டுகள் வந்து விடும். காங்கிரஸிற்கு 10 என்று சேர்த்தால் 30 வார்டுகள் கூட்டணிக்கட்சிகளுக்கே போய்விடும்.
திமுகவைப் பொறுத்தவரை மற்ற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சியில் எப்படியோ கோவை மாநகராட்சியில் 80 சதவீதம் இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அப்போதுதான் பண பலமும், மக்கள் செல்வாக்கும் இன்னமும் மாறாது இருக் கும் அதிமுகவை தம் ஆளுங்கட்சி பலத்தில் 70 சீட்டுகளிலாவது வெல்ல முடியும் என கணக்குப் போடுகிறது.
ஆகவே எங்களுக்கு 10 வார்டுகள் ஒதுக்கினாலே பெரிய விஷயம் என கணக்குப் போடுகிறார்கள் காங்கிரஸார். காங்கிரஸைப் பொறுத்தவரை இங்கே இன்னொரு கணக்கு உள்ளது. எப்படியும் தமிழக அளவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு கூட்டணிகளுக்கு எத்தனை சீட் என்பதை சதவீத அடிப்படையிலேயே முடிவு செய்யும் திமுக தலைமை. அப்படி 10 சதவீதம் காங்கிரஸிற்கு என்று ஒதுக்கினாலும் மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில் 1.5 சதவீதம் என்ற வகையில் குறைந்தபட்சம் மேயர் சீட் ஒதுக்கப்பட்டாக வேண்டும்.
அதன்படி புதிதாக உருவான சிறிய மாநகராட்சி என்றால் இரண்டு மேயரும், மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற பழைய பெரிய மாநகராட்சி என்றால் ஒரு மேயரும் கேட்க திட்டமிட்டிருக்கிறார்கள். அந்த ஒன்று என்பது கோவையாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் கோவை காங்கிரஸார். அதற்கான வரலாறையும் சொல்லுகிறார்கள்.
கோவையைப் பொறுத்தவரை நகராட்சியாக இருந்த அந்நகரம் மாநகராட்சியாக மாறியது 1981 -ல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில். அதற்கு முன்பு வரை திமுகவின் கோட்டையாகவே விளங்கியது திமுக. உடுமலை என்றால் சாதிக்பாட்சாவும், கோவை என்றால் சுக்கூருக்கும் என சிறுபான்மையினரான இஸ்லாம் சமூகத்திற்கே சீட்டை ஒதுக்கி வந்தது திமுக. அந்த காலகட்டத்தில்தான் கோவையின் பழைய நகராட்சிப் பகுதிகள் பாதாள சாக்கடை, சிறுவாணி தண்ணீர், கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் என பெரும் அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றி மாநகராட்சியாகும் தகுதிக்கு தன்னை வளர்த்துக் கொண்டது.
1981-ல் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டாலும் அப்போதிருந்து உள்ளாட்சி மன்றத்தேர்தல் நடக்காததால் 1996 வரை தனி அதிகாரிகளின்
கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டது மாநகராட்சி. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1996-ல்தான் முதல் மேயர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது திமுக-தமாக கூட்டணியில் தமாகாவிற்கே மேயர் சீட் ஒதுக்கப்பட்டது. மூப்பனாரின் வலது கரமாக செயல்பட்ட தொழிலதிபரும் முன்னாள் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏவுமான கோபாலகிருஷ்ணன் மேயர் ஆனார். அதிமுகவில் அப்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் சிங்கை பாலன். அதிமுகவிற்கு சோதனைக்காலமான அந்த நேரத்தில் மொத்தமிருந்த 72 வார்டுகளில் ஒரே ஒரு வார்டில் மட்டுமே அதிமுக வென்றது.
அதற்கு அடுத்து வந்த 2001 மாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் த.மலரவன். வழக்கம்போல் கோவை மாநகராட்சி மேயர் சீட்டை அப்போது தன் கூட்டணியான பாஜகவிற்கு ஒதுக்கியது திமுக. வக்கீல் மயில்சாமி போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அடுத்தது 2006 தேர்தல். அப்போது நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் இருந்த 14 தொகுதிகளில் (திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்படவில்லை) கோவை கிழக்கு, பொங்கலூர் தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றி ருந்தது. இரண்டு தொகுதி கள் திமுகவின் கூட்டணிக் கட்சியும், மீதி எட்டு இடங்களை அதிமுகவுமே கைப்பற்றியிருந்தது.
அதனால் திமுக அரு திப்பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் தயவோடு மைனாரிட்டி அரசாக அமைந்தது. தன் அரசு மைனாரிட்டி அரசாக அமைய காரணம் குறிப்பாக கோவை மாவட்டத்தில் கிடைத்த தோல்விதான் என்பது இப்போது ஸ்டாலின் போலவே மனவருத்தம் கொண்டிருந்த கலைஞர், மாவட்டத்தில் இரண்டு எம்.எல்.ஏக்கள் (கோவை கிழக்கில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வென்றிருந்தார்) இருந்தும் கூட அந்த மன வருத்தத்தில் கோவைக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கவில்லை.
பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியை அதிக கவுன்சிலர் சீட்டுகளை பிடித்து பெருவாரியாக வெற்றி பெற்றது திமுக. அதன் பிறகுதான் மனம் மகிழ்ந்து பொங்கலூர் பழனிசாமிக்கு அமைச்சர் பதவி கொடுத்து தன் மனவருத்தத்தை அகற்றிக் கொண்டார் கலைஞர். அப்போது நேரடியாக மேயர் தேர்தல் நடக்கவில்லை. கவுன்சிலர்கள் மூலமே நடந்தது. சீட் பங்கீடு சதவீத அடிப்படையில் அப்போது இருந்ததால் கோவை மாநகராட்சி மேயர் சீட் தன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்கு விட்டுக் கொடுத்தது திமுக.
அந்த வகையில் கோவை காங்கிரஸில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.பிரபுவின் கை ஓங்கியிருந்ததால், அவரின் தீவிர விசுவாசியான காலனி வெங்கடாசலம் மேயராக ஆக்கப்பட்டார். அதே நேரம் துணைமேயராக நா.கார்த்திக்கும், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல த்தலைவராக அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மகன் பைந்தமிழ்பாரியும் பதவி வகித்தனர்.
காங்கிரஸ் மேயராக இருந் தாலும் பெரும்பான்மை கவுன்சிலர்கள் திமுகவாக இருந்ததால் துணைமேயர் கார்த்திக்கும், அமைச்சர் மகன் பைந்தமிழ்பாரியுமே கோவை நிழல் மேயர்களாக செயல்பட்டனர்.
அந்த காலகட்டத்தில் ரூ. 3800 கோடியில் ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட் டத்தில் கோவையில் விரிவுபடுத்தப்பட்ட மாநக ராட்சி பகுதிகளுக்கும் கூட மழைநீர் வடிகால்கள், பாதாளச்சாக்கடை திட்டம், பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற பிரம் மாண்ட வேலைகள் நடந்தன. கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் தனித் தனி எம்எல்ஏக்கள் போல அதிகாரத்திலும், பொருளாதாரத்திலும் சமபலம் பெற்று வலம் வந்தனர்.
2011- சட்டப்பேரவைத் தேர்தலில அதிமுக கூட்டணி அமோக வெற்றி. ஒரே ஒரு எம்எல்ஏ மட்டும் சிங்காநல்லூரில் கார்த்திக்) திமுக எம்எல்ஏவாக தேர்வு பெற்றார். தொடர்ச்சியாக நடந்த கோவை மாநக ராட்சித் தேர்தலில் நேரடியாக மேயர் வேட்பாளர் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது.
அதில் அதிமுக வென்று மேயராக செ.ம.வேலுச்சாமி வந்தார். ஓரிரு வருடங்களில் ஒரு கார் விபத்து சர்ச்சையில் சிக்கிய செ.ம.வேலுச்சாமி அதிரடியாக மேயர் பொறுப் பிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். தமிழ்நாட்டிலேயே கட்சி மேலிடத்தின் மூலம் ஒரு மேயரை ராஜினமா செய்ய வைத்து நீக்கப்பட்ட சங்கதி கோவையில்தான் அரங்கேறியது.
அதன் பின் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கணபதி ராஜ்குமார் தேர்வு பெற்றார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சி மன்றத் தேர்தல்களே இல்லை. என்றாலும் கோவையில் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அபரி மித செயல்பாட்டால் மாநகராட்சியில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள். திரும்பின பக்கமெல்லாம் பாலங்கள். சாலைகள். போதாக்குறைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேகமெடுத்த பணிகள். மாநகராட்சித்தேர்தல் நடக்கவில்லை. கவுன்சி லர் இல்லை என்ற முணு முணுப்புகள் அந்தந்த பகுதிகளில் அளவில் உள்ள உட்கட்சி நிர்வாகிகளிடம் பேசப்பட்டதே ஒழிய மக் களிடம் இல்லாத நிலை ஏற்பட்டது. அதுதான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பத்துக்கு பத்து தொகுதிகளை அதிமுக கூட்டணிக்கு ஈட்டித் தந்தது.
அதன் பிரதிபலிப்பு தற்போதைய திமுக ஆட்சியில் நன்றாகவே தெரிகிறது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கைது செய்யும் போக்கு திமுகவிடம் உள்ளது அதற்காக முன்னாள் அமைச்சர்கள் விஜய பாஸ்கரன், வேலுமணி போன்றோர் வீடுகளில் அடிக்கடி ரெய்டுகளும் நடந்தது.
‘அதிமுக அமைச்சர்கள் சிலரை ஊழல் குற்றச் சாட்டுகளில் கைது செய்து சிறையில் அடைத்தால் ஒழிய நாங்கள் மக்களை சந்தித்து ஓட்டுக் கேட்க முடியாது. எனவே இந்தக் கைது படலம் முடிந்த பின்னால்தான் மாநகராட்சிக்கு தேர்தலே!’’ என்று திமுகவினர் வெளிப்படையாகவே பேசி வந்தனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக தான், தன் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் டார்ச்சர் செய்யப்படுவதாக பேட்டியளித்தார் முன் னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
அதேசமயம் தன் சொந்தத்தொகுதியான தொண்டாமுத்தூரில் வார்டு வாரியாக கட்சியினர் மூலம் மக்களுக்கு அதிமுக பொன்விழா பரிசாக சேலை, பிரியாணிப் பொட்டலங்கள் வழங்கினார். இதேபோல் மற்ற தொகுதிகளிலும் அந்தந்த எம்.எல்.ஏக்கள் மூலம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. அங்கெல்லாம் நாங்கள் இந்த அரசால் பழிவாங்கப்படுகிறோம். எந்த நேரமும் எங்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் வேண்டுமானாலும் கிளப்பி கைது செய்வார்கள் என்ற பிரச்சாரமும் அதி முகவினரால் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் விளைவு தற்போது திமுக தரப்பில் வேறு விதமான பேச்சு திரும்பியிருக்கிறது. ‘போகிற இடங்களில் எல்லாம் திமுக அரசு பழிவாங்கப்பார்க்கிறது!’ என்றே இவர்கள் பிரச்சாரம் செய்வதால் மக்களிடம் எங்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இவர்களை கைது செய்து விட்டு மக்களை தேர்தலுக்கு சந்தித்தால், அவர்கள் மீதே அனுதாபம் ஏற்படும். எனவே மாநகராட்சித் தேர்தலுக்குப் பின்புதான் கைது நடவடிக்கை எல்லாம் இருக்கும்!’’ என மாற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்கள்.
ஆக, கோவையைப் பொறுத்தவரை அரசியல் நிலைமை என்பது நிமிஷத்திற்கு நிமிஷம் மாறிக் கொண்டிருக்கிறது. இன்னமும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக மேயர் வேட்பாளர் களமிறக்கப்படுவாரா? அல்லது கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்ந் தெடுக்கப்படுவாரா? என்று தெரியவில்லை. இப்போது வரை பெண்களுக்கான இட ஒதுக்கீடு வகையில் கோவை மேயர் சீட் உள்ளது.
இந்த இரண்டுக்கும் ஏற்ற வகையில் தம்மை தயார் செய்து வருகிறது அதிமுக. திமுக இரண்டு கட்சிகளுமே. திமுகவில் ஐந்து மாவட்டச் செயலாளர்கள். அதில் பிரதான மாவட்டச் செயலாள ராக சிங்காநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்தியே செயல்பட்டு வருகிறார். கார்த்தி தன் மனைவியையும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தன் மகள் இந்துவையும் மேயராக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
செந்தில்பாலாஜியைப் பொறுத்தவரை இந்த தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற வைத்து தன் ஆதரவு மேயர் ஒருவரை தானே பதவியேற்க வைத்து ஸ்டாலினிடம் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டி வேலை செய்து வருகிறார். பொதுத்தேர்தல்கள் வரும்போது அவர் தன் சொந்த மாவட்டமான கரூரில் தீயாய் பணியாற்ற வேண்டும்.
அதற்குள் கோவையில் கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்கு பெறும் ஒரு விவிஐபியை உருவாக்க வேண்டும். அந்த விவிஐபி மேயராகத்தான் இருக்க முடியும். அதனால் தமிழகத்தின் எந்த மாநகராட்சி மேயர் பதவி வேண்டுமானாலும் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம். கோவை மட்டும் திமுக மேயர்தான் என்ற உறுதிப்பாட்டில் திமுகவில் அத்தனை பேரும் நிற்கிறார்கள்.
ஆக, 1975-க்கு முன்னர் கோவை நகராட்சி சேர்மனாக வலம் வந்த சுக்கூர் பாய்க்குப் பிறகு கோவையில் திமுக மேயர் என்பது கனவாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போதைய சூழல் மூலம் அது நனவாகப் போகிறது என்பதே திமுகவினர் தரப்பில் உலாவரும் அரசியல் ஆர்வமாக உள்ளது.
அதே சமயம் அதிமுகவும் தன் மல்லுக்கட்டலை விடுவ தாக இல்லை. சமீபத்தில் எஸ்.பி.வேலுமணி வழங்கிய கட்சி ‘பொன் விழா கிப்ட்’ மக்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ஆளுங்கட்சியாக இல்லா விட்டாலும், ரெய்டு-கைது என்ற அச்சுறுத்தல் இருந்தாலும் நம்ம அமைச்சர், நம்ம எம்.எல்.ஏ நம்ம கூடத்தான் இருக்கிறார்!’ என்ற ஆறுதலை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதே போக்கு அதிமுகவில் தொடருமானால் மாநகராட் சித் தேர்தலில் அவர்களுக்கு கூடுதல் பலத்தையும், உத்வேகத்தையுமே கொடுக்கும் என்றே தோன்றுகிறது.