தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பாசன ஆதாரமாக விளங்குவது சேலம்-, மேட்டூர் அணை. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கிடைக்கிறது. இதனால், அணையில் 93.4 டி.எம்.சி., நீர் நிரம்பியுள்ளது. எனவே, அணைக்கு வரும் தண்ணீர் முழுதும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாக, நாள்தோறும் 5 டி.எம்.சி.,க்கும் குறையாமல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வீணடிக்கப்பட்டு வருகிறது. இது, டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.