மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் தமிழக  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  நேரில் சென்று ஆய்வு செய்தார். டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக தற்போது  மேட்டடூ அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு மற்றும்  மேட்டூர் அணையின் நீர்வரத்து மற்றும் எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தார். மேலும் மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டம் குறித்தும் அதிகாரிகளுடன் விவாதித்தார்.

scroll to top