மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக தீப்பெட்டி விலையை உயர்த்த முடிவு

201809240318026253_Reduce-18-per-cent-GST-slab-demand-matchbox-makers_SECVPF.jpg

தமிழகத்தில்  ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த தீப்பெட்டி விலை சுமார் 14ஆண்டுகளுக்கு பிறகு 2021ம் ஆண்டு டிசம்பர் 1ந்தேதி முதல்  ரூ. 2 ஆக உயர்ந்தது. இந்நிலையில், தற்போது மேலும் விலை உயர்ரும் நிலை ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை  30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், தீப்பெட்டி பண்டல்கள் விலையை உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வரும் ஏப்ரல் 1ம்தேதி முதல் 600 தீப்பெட்டி கொண்ட ஒரு பண்டலின் விலையை ரூ.50 உயர்த்த கோவில்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே தீப்பெட்டி விலையை ரூ 2 ஆக உயர்த்தி உள்ள நிலையில், அதனை உயர்த்த முடியாது என்பதால் மூலப்பொருள்களின் விலை உயர்வினை சமாளிக்கும் வகையில் தீப்பெட்டி பண்டல்களின் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுத்தொடர்பாக கோவில்பட்டியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் தீப்பெட்டி பண்டலுக்கு ரூ 50 உயர்த்த முடிவு செய்துள்ளனர். 600 தீப்பெட்டி கொண்ட ஒரு பண்டலுக்கு தற்பொழுது 300 ரூபாய் என விற்பனை செய்து வரும் நிலையில் ஏப்ரல் 1ந்தேதி முதல் மொத்த வியாபாரிகளுக்கு ரூ 350க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வினால் சற்று உயர்ந்து மூலப்பொருள்களின் விலைக்கு ஈடு கொடுக்க முடியும் என்று தீப்பெட்டி உற்பதியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

scroll to top