மூன்றாம் உலகப்போர் துவங்கிவிட்டதாக ரஷிய அரசு ஆதரவு செய்தி ஊடகம் தகவல்

ரஷ்ய மாளிகையான  கிரெம்ளினின் முக்கிய பிரச்சார ஊதுகுழலான ரஷ்யா 1ன், இது தொடர்பான வீடியோவும்  வைரலாகியுள்ளது, இது இராணுவ மோதல் ‘மூன்றாம் உலகப் போர் என்று பாதுகாப்பாக அழைக்கப்படலாம்’ என்று அதன்  தொகுப்பாளர் ஓல்கா ஸ்கபேயேவா கூறியுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போர் 50 நாட்களை கடந்து  நடைபெற்று வருகிறது. இந்த போரில் கடந்த வாரம் ஷியாவின் முக்கிய போர்க்கப்பலான மொஸ்க்வா கருங்கடல் பகுதியில் மூழ்கடிக்கப்பட்டது. இதற்கு ரஷ்யா,  வெடிமருந்துகள் வெடித்து தீப்பற்றியதாக தெரிவித்தது. ஆனால்,  உக்ரைன் ராணுவமோ தனது நெப்டியூன்  ஏவுகணை மூலம் மாஸ்கோவின் கருங்கடல் கடற்படையின் முதன்மைக் கப்பலான மொஸ்க்வாவை தாக்கி அழித்ததாக கூறுகிறது.

இந்நிலையில், ரஷ்ய அரசு தொலைக்காட்சியான ரஷ்யா 1 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது நடப்பது மூன்றாம் உலகப்போர் என தெரிவித்துள்ளது.  இத்தனை நாட்களாக நடந்து வரும் போர் உக்ரைனுக்கு எதிரான போர் இல்லை, நேட்டோ நாடுகளுக்கு எதிரான போர். மாஸ்கோவா கப்பல் மூழ்கியதற்கு பின் இந்த போர் தீவிரமடைந்திருப்பதை நாம் நிச்சயம் மூன்றாம் உலகப்போர் என்று தான் அழைக்க வேண்டும் என அந்த செய்தி தொகுப்பை வெளியிட்ட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

scroll to top