முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கடந்து வந்த பாதை…

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டவர் பிபின் ராவத்.தலைமுறை தலைமுறைகளாக தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றும் உத்தரகண்ட் சேர்ந்த ராஜ்புத் வம்சாவளியில் பிறந்தவர் பிபின் ராவத். இவர்  சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியிலும் பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தவர். தமிழகத்தில் உள்ள வெலிங்டனில் பாதுகாப்பு பிரிவு உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தஇவர், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் இவர் பங்கெடுத்துள்ளார். சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் எம்.பிலும், மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பையும் பெற்றுள்ளார். ராணுவ போர்த்திறன் குறித்த தனது ஆய்வுக்காக, கடந்த 2011ம் ஆண்டு, மீரட்டில் உள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில்  முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1978ம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் அவரது தந்தை பணியாற்றிய படையான கூர்க்கா ரைபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார் . டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட அனைத்து வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கும் பொறுப்பை வகித்தவர். 2016ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31ம் தேதியன்று, இந்திய ராணுவத்தின் 27 வது தலைமைத் தளபதியாக பதவியேற்பதற்கு முன், துணை தலைமைத் தளபதியாக பணியாற்றி வந்தார். இந்திய தரைப்படையின் 27வது தலைமைப் படைத் தலைவராக பணியாற்றிய இவரை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமைத் தளபதியாக இந்தியக் குடியரசுத் தலைவர் நியமித்தார். இந்தியப் முப்படைகளின் தலைமை தளபதியாக கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதி பதவியேற்றார் பிபின் ராவத். இத்தனை சாதனைகளை படைத்த  பிபின் ராவத் அவர்கள் கோவை குன்னூர் வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது   மனைவி மதுலிகா ராவத்   மற்றும் 12 ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர்  மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டு அனைவரும் உயிர்யிலந்த சம்பவத்தால் நாடு முலுவதையும்  ஆழ்ந்த சோகத்தில் உள்ளது. நாடு பிரமுகர்கள், தேசிய தலைவர்கள், அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

scroll to top