முன்விரோதம் காரணமாக வாலிபர் மீது தாக்குதல்: தந்தை மகன் உள்பட 3 பேர் கைது

தெற்கு வெளி வீதி ஞானம்மாள் கோவில் தெற்கு சந்து பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் கார்த்திகேயன் 33 .இவருக்கும் கீரத்துரை மேல தோப்புவைசேர்ந்த சித்திரவேல் அவருடைய மகன் ஜெயபால் 47 இவர்களுடன், முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில், தெற்கு வாசல் எப்.எப். ரோடு பகுதியில் சென்றபோது, சித்திரவேல் அவருடைய மகன் ஜெயபால் மற்றும் கீரை துறையை சேர்ந்த செல்வம் மகன் ஹரிஹரசுதன் 24 ஆகிய மூவரும் கார்த்திகேயனை பலமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, கார்த்திகேயன் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தாக்கிய தந்தை மகன் உள்பட மூவரை கைது செய்தனர்.

scroll to top