முதுமலை யானை முகாமில் யானைகளுடன் பிரதமர் மோடி

.jpg

​நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் விருது வென்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் யானைகளுடன் பாசத்துடன் விளையாடினார்.

பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடி இன்று காலை நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை புரிந்தார். அங்கு அவர் ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர்களின் வாழ்க்கை முறை, யானை வளர்ப்பு ஆகியவற்றை பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார். பின்னர் அவர்களின் சேவைக்கு பாராட்டு தெரிவித்தார். இதனையடுத்து பிரதமர் மோடி முகாமில் உள்ள யானை பாகன்களை சந்தித்து பேசினார். அங்கு யானைகள் வளர்ப்பு, பராமரிப்பு பற்றிய விஷயங்களை கேட்டார். மேலும் யானைகளுக்கு பிரதமர் மோடி கரும்பினை வழங்கினார். அப்போது யானை துதிக்கையை தூக்கி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தது.

scroll to top