முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

1633248919902-e1633263416484.jpeg

மதுரை மாவட்டம், மேலூரில் ,தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு, நகர திமுக சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது . இதனை ,மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், பத்திரப்பதிவு துறை அமைச்சருமான பி.மூர்த்தி, தலைமை ஏற்று கொடியசைத்து மாட்டுவண்டி பந்தயத்தினை துவக்கி வைத்தார். இந்த பந்தயத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாட்டுவண்டிகள் கலந்து கொண்டனர். பெரியமாடு, சிறியமாடு என இரு பிரிவாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் எல்கை தூரத்தினை கடந்து ஒவ்வொரு மாட்டுவண்டியும் சீறிபாய்ந்து வந்தது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு பந்தயம் 22 மாற்று இரண்டாவதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 17 மாட்டு வண்டிகளும் பங்கேற்றது. இதில், பெரிய மாட்டுபிரிவில், முதல்பரிசை மாநில காளை வளர்ப்போர் சங்கத் தலைவர் அவனியாபுரம் எஸ்.கேஆர் மோகன்குமார் காளைக்கு 1 ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 69 பரிசு மற்றும் கேடயமும், இரண்டாம் பரிசினை நொண்டிகோயில்பட்டி துரைப்பாண்டி 1 இலட்சம் ரூபாயினையும் , 3 வது பரிசு அ.வள்ளாளபட்டி மகாவிஷ்ணு 70 ஆயிரம் , நொண்டி கோவில்பட்டி ஆர் கே சந்திரன் மாடு , ஆறுதல் பரிசு சின்னம் மாங்குளம் அழகு மாட்டிற்கு 20 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. இதே போல, சின்னமாட்டு பிரிவில் முதல்பரிசையும் மாநில காளை வளர்ப்போர் சங்க தலைவர் அவனியாபுரம் மோகன்குமார் மாடு முதல்பரிசான 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கேடயத்தையும் பெற்றது. இரண்டாம் இடத்தை, எட்டிமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் பங்கஜம் கணேசன் மாடு 50 ஆயிரம் , மூன்றாவது பரிசை மாநில காலை வளர்ப்போர் சங்க பொருளாளர் நெல்லை கண்ணன் மாடு 40 ஆயிரம் , ஆறுதல் பரிசை சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் மாடு 10 ஆயிரத்து பரிசுகளை பெற்றது .
முதல் நான்கு இடங்களுக்கு வந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் கேடயங்களை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
முன்னதாக, மேலூரிலிரிலிருந்து சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தினை வழிநெடுகிலும் ஏராளமான ரேக்ளாரேஸ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கண்டுரசித்தனர். இந்த பந்தயத்தில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , மாவட்ட கவுன்சிலர் கழக இலக்கிய அணி மாநில துணைச் செயலாளருமான நேருபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் , முன்னாள் யூனியன் சேர்மன் செல்வராஜ் , மேலூர் நகராட்சி சேர்மன் முகமது யாசின் , மேற்கு ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் , மாவட்ட ஊராட்சி சேர்மன் சூர்யகலா கலாநிதி , வண்டியூர் அழகு பாண்டி , அ.வல்லாளப்பட்டி பேரூராட்சி சேர்மன் குமரன் , மாவட்ட அமைப்பாளர் நாவினிப்பட்டி வேலாயுதம் , நகராட்சி துணை சேர்மன் இளஞ்செழியன் , ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் , ராஜராஜன் , கிருஷ்ணமூர்த்தி , பழனி, பூஞ்சுத்தி பிரபு , மாவட்ட மாணவர் அணி செயலாளர் மருதுபாண்டி , பந்தய ஏற்பாட்டாளர்கள் மார்க்கெட் ராஜேந்திரன் , இளமாறன் , தற்காகுடி சரவணன் உள்ளிட்ட கழக முன்னணியினர் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

scroll to top