முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா

s4315gn-yashwant-sinha-pti-625x300-24-june-22-1656096442.jpg

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, . தேசிய ஜனநாயக கூட்டணி  சார்பில், வேட்பாளராக  திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து,  எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு, மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் யஷ்வந்த்சின்ஹா  நாளை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். அப்போது,  திமுகவின் ஆதரவை  கோருகிறார்.  நாளை மாலை 5மணிக்கு இவர்களின் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top