முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

s.jpg

​மார்ச் 1ந்தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளதையொட்டி நாளை மாலை, பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து வீடியோவில்,  ‘எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துகிறேன்.’ என்று வாழ்த்தியுள்ளார்.

scroll to top