முடுவார்பட்டி ஊராட்சியில் மாடசாமி கோவில் கும்பாபிஷேகம்

WhatsApp-Image-2023-04-04-at-19.19.10.jpg

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் , முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாடசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த சர்வ சாதகர் வெங்கட்ராம குருக்கள் தலைமையில், யாகசால பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது .

கடஸ்தாபனம், பிரவேசபலி, கலசபூஜை, முதல்கால யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ண ஆகுதி, யாக பூஜைகள் நடைபெற்றது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, கோயில் சார்பில் அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ மாடசாமி திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

scroll to top