முககவசம் அணிவது கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

images-10.jpeg

தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து, தினசரி பாதிப்பு 22 ஆக சரிந்துள்ள நிலையில், டெல்லி மற்றும் அரியானா போன்ற ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடும் அளவிற்கு இல்லை என்றாலும் கூடுதல் கவனம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பொது இடங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து, தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

scroll to top