மீனாட்சியம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: இறுதி நாளான கனக தண்டியல் அலங்காரத்தில் மீனாட்சிஅம்மன் எழுந்தருளினார்:

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்.
இதில், ஆடி முளைக்கொட்டு விழா மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாவாகும்.
இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா கடந்த 30 ம் தேதி கொடியேற்றத்துடன் கோலமாக தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
விழா நாட்களில், மீனாட்சி அம்மன் சிம்மம், அன்னம், கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
10-ம் நாளான இன்று மீனாட்சியம்மன் கனக தண்டியல் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
மீனாட்சி அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

scroll to top