மீதமுள்ள ராஜீவ் கொலையாளிகள் விடுதலை குறித்து முதல்வர் ஆலோசனை

Tamil_News_large_2771036.jpg

மூன்று நாள் பயணமாக ஊட்டியில் முகாமிட்டுளள பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் ராஜீவ்கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக  விசாரணைநடைபெற்ற நிலையில், இறுதியில், உச்சநீதிமன்றம், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து  தீர்ப்பளித்தது. இதைதொடர்ந்து, மற்ற குற்றவாளிகள் 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அமைச்சர் துரைமுருகன், ரகுபதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

scroll to top