நந்தா’ படத்தின் மூலம் நடிகர் சூர்யாவுக்கு திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குநர் பாலா. நந்தா படத்துக்கு பிறகே நடிகர் சூர்யா ஒரு நல்ல நடிகர் என அடையாளப்படுத்தப்பட்டார். மேலும் பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படத்தில் ஒரு கலகலப்பான நடிகராக சூர்யா தோன்றி ரசிகர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்கினார்.இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவும் இயக்குநர் பாலாவும் இணையவிருக்கின்றனர். சூர்யாவின் 41வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தை ஜோதிகாவுடன் இணைந்து சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மீண்டும் பாலாவுடன் இணையும் சூர்யா: படப்பிடிப்பு இன்று தொடக்கம்
