ஆதார் சட்டம் 2016 பிரிவு 7-ன் கீழ், மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதில், முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை.
மின் நுகர்வோர் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் – அரசாணையை வெளியிடு
