மின் கட்டணம் உயர்ந்தால் பல குறு, சிறு தொழில் நிறுவனங்கள் அழியும்: ‘FOCIA’ தொழில்கள் கூட்டமைப்பினர் வேதனை

Pi7_Image_IMG-20220802-WA0066.jpg

THE KOVAI HERALD

L.Rajagopal

கோவை மாவட்டத்தின் தொழில் கூட்டமைப்பான ‘போசியாவின்'(FOCIA) கூட்டம் 2.8.2022ல் காஸ்மாபேன்(COSMAFAN) அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ஜேம்ஸ் S.சுருளிவேல் A.சிவசண்முகம் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.  கூட்டத்தில் கிழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் மின்சார வாரியம் சமீபத்தில் மின் கட்டண உயர்வுக்கு பரிந்துரை செய்துள்ளது இந்த பரிந்துரையால் குறு சிறு தொழில்கள் அழியும் அபாயம் உள்ளன.
தமிழக  அரசின் இந்த நடவடிக்கை சிறு குறு தொழில் முனைவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறு குறு தொழில்களுக்கு மின் கட்டணம் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிகிறோம். எல்சிடி வகை இணைப்புகளுக்கு  (fixed Charges)  நிலையான கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூபாய் 35லிருந்து ரூபாய் 600 ஆக உயர்த்த இருப்பதாக அறிகிறோம்.இது கிட்டத்தட்ட 1715% [சதவீதம்] அதிகமாக இருக்கிறது.  இது 17 மடங்கு அதிகமாக தெரிகிறது.அதேசமயம் உயர் மின் அழுத்த இணைப்புகளுக்கு அதாவது ஹெச்டி வகை இணைப்புகளுக்கு 71 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது (Peak hour charges) இரவு நேர பயன்பாட்டுக்கு மின் கட்டண சலுகை அளிக்க வேண்டும். என FOCIA தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. குஜராத் போன்ற மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. எங்களுடைய கோரிக்கைக்கு நேர்மாறாக தமிழக அரசு உச்ச நேர பயன்பாட்டுக்கு 25 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தும் என சொல்லப்பட்டுள்ளது. இதைத் தவிர ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுதோறும் 6 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது. மேற்படி பரிந்துரைகள் தமிழக சிறு குறு தொழிலை பெரிதும் பாதிக்கும் சிறு குறு தொழில்களை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும். தமிழக முதல்வரின் கனவான ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமும் நிறைவேறாமலே போகும் என்பதை வருத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று உள்ள தொழில்களை பாதுகாக்க தமிழக அரசு மின் கட்டணம் உயர்வை குறைந்த பச்சம் இரண்டு ஆண்டுகளுக்கு உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இந்த கூட்டத்தில் 17 தொழில் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

scroll to top