மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக அரசுமறுபரிசீலனை செய்ய வேண்டும் : OSMA கோரிக்கை

Pi7_Image_WhatsAppImage2022-08-06at3.59.16PM.jpeg

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை இரண்டு ஆண்டுகள் தமிழக அரசு ஒத்தி வைக்க வேண்டும் என  தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கம்(OSMA) கோரிக்கை வழியுறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில்:- தமிழக அரசு மின் கட்டண உயர்வை இன்னும் இரண்டு மாதங்களில் அமுல் படுத்த திட்டம் உள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டால் தற்பொழுது உள்ள ஜவுளித்துறையின் கஷ்டமான சூழலில் மிகப்பெரிய நஷ்டத்தை ஜவுளித்துறை சந்திக்க நேரிடும். தமிழ்நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட OE மில்கள் இயங்கி வருகிறது. இதில் 70% மில்கள் LT/CT மின் இணைப்பிலும் 30 % மின் இணைப்பிலும் உள்ளன. தற்பொழுது LT/CT இணைப்பில் உள்ளகளுக்கு Demand charge Rs.35/kw யில் இருந்து 600/kw ஆக உயர்த்த திட்டம் உள்ளார்கள். அதே போல unit charges 6.35/ unit to 7.50 ஆக உயர உள்ளது. அது போக இத்தனை நாள் நடைமுறையில் LT/CT நுகர்வோர்களுக்கு இல்லாத peak hour consumption charges (6.30 to 10.30 and 18.00 to 22) 33% (1.88 paise / unit) அதிகம் கட்டணம் செலுத்த வேண்டும். இவை எல்லாம் கூட்டி பார்த்தால் . மின்கட்டண உயர்வு அமுல்படுத்தினால் தற்பொழுது உள்ள மின் கட்டணத்தை விட 6.78/ unit யில் இருந்து 11.78/unit ஆக LT/CT இணைப்பு தாரர்களுக்கு மாறும். (73%) அதே போல HT இணைப்பில் உள்ளவர்களுக்கு 8.95 Rs to 11.66/ unit ஆக கட்டண உயர்வு இருக்கும் (30.3%) தமிழ்நாட்டில் 67% சதவீத மின்சாரம் இணைப்பில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யபடுகிறது 20% HT இணைப்பில் உள்ளவர்களுக்கு விற்பனை ஆகிறது. OE மில்கள் இந்த கட்டண உயர்வால் ஒரு கிலோ நூலுக்கு ரூ.10/kg மின்சார கட்டணம் உயர்வு ஏற்படுகிறது. இதனால் ஏழை மக்கள் பயன்பாட்டுக்கு உற்பத்தி ஆகும் ஜவுளி பொருட்கள் அனைத்தும் கடுமையாக விலை உயரும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே சர்வதேச அளவில் காட்டன் விலை ஏற்றம், காரணத்தினால் ஜவுளித்துறை மிக பெரிய பாதிப்பை கடந்த இரண்டு மாதங்களாக சந்தித்து வருகிறது. எனவே தமிழக அரசு தற்போதைக்கு இந்த மின்கட்டண உயர்வை இரண்டு வருடத்திற்கு தள்ளி வைத்தால் மட்டுமே ஜவுளித்துறை உயிர் பிழைக்கும் இல்லை எனில் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி தொழில் பாதிப்பு ஏற்பட்டு பல லட்சம் மக்கள் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். மேலும் வரும் காலங்களில் LT/CT மின் இணைப்பு தாரர்கள் காற்றாலை மின்சாரம், சோலார் மின்சாரம் உற்பத்தி செய்தால் அந்த மின் உற்பத்தியை மின்சார கட்டணத்தில் கழித்து கொள்ளும் நடைமுறையை HT இணைப்பில் உள்ளவர்களுக்கு உள்ளது போல LT/CT இணைப்புதாரர்களுக்கும் வழங்க அரசாணையை மாற்றி அமைத்து LT/CT மின் இணைப்புகாரர்களுக்கு உதவி புரிய வேண்டும்.எனவே OSMA வின் வேண்டுகோளை மாண்புமிகு தமிழக முதல்வரும், மாண்புமிகு மின்சார துறை அமைச்சரும் கருத்தில் கொண்டு மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு தாழ்வன்புடன் கேட்டு கொள்கிறோம். என அந்த அறிக்கையில் OSMA  தலைவர் ஜி.அருள்மொழி. தெரிவித்தூள்ளார்.

scroll to top