நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை சமீபத்தில் ஒரு நாளைக்கு 100 மில்லியன் யூனிட் (MU) என்ற எல்லையைத் தாண்டியதால், மேலும் ஆபத்தான நிலைக்கு உயரும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கைகள் வந்துள்ளன. நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களின் மூலமாகவே நாட்டின் மின்சாரத் தேவை தற்போது பெருமளவில் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கோடை காலம் துவங்கி விட்டதால் மின்தேவை அதிகரித்துள்ளது. அதனால் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மின்வெட்டு பிரச்சினை தலைதூக்கி உள்ளன. தமிழ்நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, மின்வெட்டும் ஏற்பட்டு வருகிறது என மாநில அரசு கூறுகிறது. இதில், மத்திய, மாநில அரசுகள் ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்களக்கு தேவையான நிலக்கரி இருப்பு கையில் இல்லாததால், தனியார் நிறுவனத்திடம் இருந்து நிலக்கரி வாங்க வேண்டிய நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இதனை சமாளிக்கும் வகையில் அந்தந்த மாநில அரசுகள் மின்சார கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.