மின் கட்டணத்துடன் சேர்த்துள்ள ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

Vijayakant_EPS-e1640616428808.jpg

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பதிவுக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் கட்டணம், எனப் பல வகையான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை எந்த கட்டணத்துக்கும் ஜி எஸ் டி விதிக்கப்படவில்லை. தற்போது இவை அனைத்திற்கும் தற்போது 18 சதவீத ஜி எஸ் டி வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மின் பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் பிற மின் கட்டணங்களுக்கு 18 சதவீத ஜி எஸ் டி விதிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்குத் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அவ்வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்,

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதால் மின் கட்டணம் அதிகரிப்பதோடு, அதனுடன் வரியும் சேர்த்துள்ளதால், மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மின்கட்டணத்துக்கு ஜி எஸ் டி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்வதோடு, இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படையாக செயல்படவேண்டும்”

என அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

scroll to top