மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், முன்னாள் சபாநாயகர் படம் திறப்பு

WhatsApp-Image-2023-05-20-at-11.49.01.jpg

மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும் முதுபெரும் வழக்கறிஞருமான, பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் திருவுருவப்படத்தினை , சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்,ருக்மணி பழனிவேல்ராஜன், முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம்,வழக்கறிஞர் சங்கத்தலைவர் நெடுஞ்செழியன், செயலாளர் மோகன் குமார்,பொருளாளர் கணேசன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

scroll to top