மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியா் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

கோவை ஆர் .எஸ்.புரத்தில் ஒரு தனியார் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர் ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த மிதுன் சக்ரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மீரா ஜாக்சன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.கைது செய்யப்பட்ட மிதுன் சக்ரவர்த்தி ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்தார். இதன்படி செவ்வாய்க்கிழமை அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செயப்பட்டார்.

scroll to top